பருத்தித்துறை கற்கோவளத்தில் நேற்று இரவு வாள்வெட்டு. மூவர் வைத்தியசாலையில் அனுமதி, மூவர் போலீசாரால் கைது. அச்சத்தில மக்கள்

நேற்று ஞாயிற்றுக் கிழமை (10.10.2021) பிற்பகல் இரண்டு மணியிலிருந்து இரவிராவாக வாள்வெட்டுக் குழுக்களால் பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் வெட்டுக் காயங்களுக்குள்ளாகி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;

ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் கற்கோவளம் புனிதநகர் பகுதியில் போதையில் ஒரு சிலர் சண்டித்தனத்தில் ஈடுபட்தாகவும் இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு சிலர் குறித்த நபர்களை தமது வீட்டிற்கு முன்னால் நின்று சத்தம் போட வேண்டாம் என்று தெரிவித்ததை அடுத்து குறித்த நபர்கள் பிற இடங்களில் இருந்தும் அவ்வூரிலிருந்தும் வாள் வெட்டு குழுக்களை அழைத்து வீடுகள் கதவுகள், கார்கள்
உந்துருளிகள் உட்பட ஐந்து வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதுவரை பருத்தித்துறை போலீசாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடரந்தும் பருத்தித்துறை போலீசார் பாதுகாப்பு கடமையில் அப்பகுதியில் உள்ளனர். நேற்றைய தினம் இராணுவம், சிறப்பு அதிரடி படை குவிக்கப்பட்டு வாள் வெட்டு குழுக்கள் அடக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தமது கிராமத்தில் கஞ்சா கள்ளமண், கசிப்பு உட்பட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவருக்கே இவ்வாறு வாள் வெட்டிலும் சண்டித்தனத்திலும் ஈடிபடுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் வாள் வெட்டுக் குழுக்கள் வந்தபோது தாம் ஓடி ஒழித்துள்ள நிலையிலேயே தம்மை காப்பாற்றி கொண்தாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பருத்தித்துறை கற்கோவளத்தில் நேற்று இரவு வாள்வெட்டு. மூவர் வைத்தியசாலையில் அனுமதி, மூவர் போலீசாரால் கைது. அச்சத்தில மக்கள்

எஸ் தில்லைநாதன்