நீர்ப்பாசன  திணைக்களத்திற்கு  உரித்தான  வீதியை  புனரமைக்க நானாட்டான் பிரதேச சபைக்கு அனுமதி
நீர்ப்பாசன  திணைக்களத்திற்கு  உரித்தான  வீதியை  புனரமைக்க நானாட்டான் பிரதேச சபைக்கு அனுமதி

முருங்கன்பிட்டி பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக பாவனையில் ஈடுபடுத்தி வந்த முருங்கன்பிட்டி, சிறுகண்டல் இணைப்பு வீதியாக உள்ள முருங்கன் குளக்கட்டு வீதியை புனரமைப்பு செய்வதற்கு மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு மன்னார் நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளரினால் உத்தியோகபூர்வ ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட முருங்கன் பிட்டி, சிறுக்கண்டல் இணைப்பு வீதியாக உள்ள முருங்கன் குளக்கட்டு வீதியை பல ஆண்டு காலமாக அத்தியாவசிய தேவைகளுக்காக இப் பகுதி மக்கள் பிரதான வீதியாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இவ் வீதியானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டதால் மக்கள் இக் குளக்கட்டு வீதியில் தங்கள் பயணங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர்.

இவ் வீதியை புனரமைத்து தரும்படி இவ் வாழ் மக்கள் பல தரப்பினரிடமும் நீண்ட நாட்களாக கோரிக்கைகள் விடுத்து வந்தபோதும் இது மத்திய நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்த படியினால் இவ் வீதியைப் பிரதேச சபையினால் புனரமைப்பு செய்ய முடியாமல் இருந்து வந்ததும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இருந்தபோதும் இது தொடர்பாக பல கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த வீதியை நானாட்டான் பிரதேச சபை புனரமைப்பு செய்வதற்கு மன்னார் நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளரினால் உத்தியோகபூர்வமாக ஆவணம் நானாட்டான் தவிசாளர் தி.பரஞ்சோதி அவர்களிடம் வியாழக் கிழமை (30) கையளிக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் முருங்கன், நீர்ப்பாசன திணைக்களப் பொறியியலாளர், திணைக்கள உத்தியோகத்தர், நானாட்டான் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் , கிராம மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் , ஒப்பந்த காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் வேலைத்திட்டத்திற்கான நிதியானது பிரமாண நன்கொடை அடிப்படையில் 2021ம் ஆண்டுக்கான நிதி மூலம் 10.2 மில்லியன் கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றிற்கான நிதியினை முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஏற்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீர்ப்பாசன  திணைக்களத்திற்கு  உரித்தான  வீதியை  புனரமைக்க நானாட்டான் பிரதேச சபைக்கு அனுமதி

வாஸ் கூஞ்ஞ