நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்களின் உணர்வுகளை மழுங்கடிக்காதீர்!

ஆசிரியர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கைக்கு ஈடுபடுத்தும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும், அதேவேளை நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடிவரும் ஆசிரியர்களின் போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டாம் என்றும், அவர்களுக்கும் தங்களுக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம் என்றும் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் கிளிநொச்சி மாவட்ட செயலரை கோரியுள்ளது.

சற்றுமுன் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு;

வடமகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்,
சங்கிலியன் வீதி,
நல்லூர்
யாழ்ப்பாணம்.
19/10/2021

ஊடக அறிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை / பட்டதாரி பயிலுனர்களை பயன்படுத்தல் தொடர்பாக;

நாளை மறுதினம் ( 21.10.2021 ) பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பாடசாலைகளை நிறப்பதற்கு ஆசிரியர்கள் வராவிடின் அவர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை / பட்டதாரி பயிலுனர்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிய முடிகின்றது .
இதனை எவ்விதத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கமாகிய நாம் ஏற்றுக்கொள்ள முடியாது நியாயமான முறையில் தமக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பிற்காக போராட்டங்களை முன்னெடுத்துவரும் ஆசிரியர்களின் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதத்தில் இவ்வாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களையோ அல்லது பட்டதாரி பயிலுளர்களை பயன்படுத்த திட்டமிடுவதன் ஊடாக ஆசிரியர்களை மட்டுமல்ல எம்மையும் அவமதிப்பு செய்வதாக அமையும் என்பதோடு, தொழில் சங்கங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதாகவும் அமையும் எனவே இதனை உடனடியாக கைவிடுமாறு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை கேட்டுக் கொள்வதோடு, இவ்வாறான செயற்பாடுகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்களின் உணர்வுகளை மழுங்கடிக்காதீர்!
நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்களின் உணர்வுகளை மழுங்கடிக்காதீர்!

எஸ் தில்லைநாதன்