
posted 2nd October 2021

நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுகின்ற மற்றும் விசேட தேவையுள்ள 12 - 19 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொவிட் 19 தடுப்பூசியான பைசர் ஏற்றுகின்ற அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (01) பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் நடைபெற்றது.
வைத்தியசாலையின் மாநாட்டு மண்டபத்தில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி பரணிதரன் கலந்து சிறப்பித்ததோடு தடுப்பூசி ஏற்றும் வைபவத்தையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இன்று சனிக்கிழமையில் (02) இருந்து, ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் ஏற்கனவே விபரங்கள் திரட்டப்பட்டு பதிவு செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட சிறார்களுக்கு தினமும் இத்தடுப்பூசி வைத்தியசாலையில் போடப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்