
posted 26th October 2021
நானாட்டான் பிரதேச சபை புதிய உறுப்பினராக பெனடிக்ற் யக்கோப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினராக இருந்து இயற்கை எய்திய நாகூர் மீரா ராசிக் பரீது இடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நானாட்டான் பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நாகூர் மீரா ராசிக் பரீது அவர்கள் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினர் பதவிக்கு மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் கற்கிடந்த குளம் கிராமத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட திரு பெனடிற் யக்கோப்பிள்ளை அவர்கள் நானாட்டான் பிரதேச சபைக்குரிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய உறுப்பினராக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் விமல ரூபன் அவர்களால் 05.10.2021 நியமிக்கப்பட்டுள்ளார்
அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் நானாட்டான் பிரதேச சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
நானாட்டான் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக பெனடிற் யக்கோப்பிள்ளை அவர்கள் சட்டத்தரணி மகேந்திரன் ரூபன் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து திங்கள் கிழமை (25.10.2021) அன்று நானாட்டான் பிரதேச சபையின் 44 வது கூட்டத் தொடரில் பங்கேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ