நாதஸ்வர இசைக் கலைஞன் கே.பி குமரனுக்கு கௌரவிப்பு

யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞன் கே.பி குமரனுக்கு 18/10/2021 திங்கட்கிழமை இரவு சாவகச்சேரி-சங்கத்தானை இராக்கச்சி அம்மன் தேவஸ்தானத்தில் வைத்து கௌரவிப்பு அளிக்கப்பட்டது.

வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்தா திரைப்படப் பாடலொன்றுக்கு இமான் இசையமைப்பில் நாதஸ்வர இசை வழங்கியமைக்காக கே.பி.குமரனுக்கு சங்கத்தானை நாதஸ்வரக் கலைஞர்கள் கௌரவிப்பளித்திருந்தனர்.

திருக்கணிதப் பதிப்பக முகாமையாளர் சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கலந்துகொண்டு நாதஸ்வரக் கலைஞன் குமரனை கௌரவித்திருந்தார்.மேலும் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் கலந்துகொண்டிருந்தார்.

நாதஸ்வர இசைக் கலைஞன் கே.பி குமரனுக்கு கௌரவிப்பு

எஸ் தில்லைநாதன்