
posted 30th October 2021
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமையான கால அட்டவணையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது - இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் நேற்று காலை செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு பேருந்துகள் தேவையில்லை எனில், பாடசாலை அதிபர்கள், பேருந்து சாலை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முடியும்.
பருவகாலச் சீட்டு இல்லாதவர்களை ரயிலில் பயணிக்க அனுமதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இது குறித்து கோவிட்-19 செயலணியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்