
posted 8th October 2021
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் கோடரியைக் காட்டி மிரட்டி நகைத் திருட்டில் ஈடுபட்ட சந்கேத்தில் தாவடியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 03ஆம் திகதி அதிகாலை 12.45 மணியளவில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதன்போது 21 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்