
posted 15th October 2021
விவசாயச் செய்கைக்குத் தேவையான உரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி, கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காலை 10 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து மாவட்ட செயலகம் வரை சென்ற பேரணி, மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்தது.
இதன்போது ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான மகஜர் கையளிக்கப்பட்டது.
மகஜர்களை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் பெற்றுக்கொண்டார்.
குறித்த போராட்டத்தில், "சேதனப் பசளை உரிய தரத்தில் கிடைப்பதில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் 40 வீதமான நிலங்கள் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் பெற்றுத் தர வேண்டும்" - என்று வலியுறுத்தப்பட்டது.

எஸ் தில்லைநாதன்