
posted 15th October 2021
வவுனியாவில் தீயில் எரிந்து பெண் ஒருவர் மரணமடைந்தார். இந்த சம்பவத்தில் சந்தேகத்தில் மரணமான பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று விியாழக்கிழமை காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, வவுனியா, கற்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் வீட்டிலிருந்து புகை வெளிவந்தததைத் தொடர்ந்து அயலவர்கள் அங்கு சென்றனர். அப்போது வீட்டின் அறை ஒன்றில் அந்த வீட்டில் வசித்த பெண் தீயில் எரிந்துகொண்டிருந்தார்.
இதையடுத்து அயலவர்கள் கதவை உடைத்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், பெண் முற்றாகத் தீயில் எரிந்து மரணமானார். இந்த சம்பவத்தின்போது அவரின் மகனான சிறுவன் மலசலகூடத்திற்குள் வைத்து வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தார்.
விசாரணையின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்தனர்.

எஸ் தில்லைநாதன்