
posted 19th October 2021
பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண் சிசு உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
வட்டுக்கோட்டை, அராலி தெற்கைச் சேர்ந்த சிசு தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளது.
சிசு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டது.
எனினும், சிகிச்சை பயனின்றி சிசு உயிரிழந்தது என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

எஸ் தில்லைநாதன்