
posted 7th October 2021
வடக்கு மாகாணத்தில் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளை கொண்ட 680 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என்று ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் மீள ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று மெய்நிகர் வழியிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் சகல மாகாணங்களின் ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் கல்வி செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு தகவல அளித்த வடக்கு ஆளுநர், “இலங்கையின் சகல மாகாணங்களின் ஆளுநர்களாலும் கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி 200 மாணவர்களுக்கு உட்பட்ட தரம் 1-5 வரையிலான வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் ஆரம்பமாகும். இதன்படி வடக்கு மாகாணத்தில் 680 பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்” என்றார்.

எஸ் தில்லைநாதன்