
posted 24th October 2021
தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கில் இருந்து எம்மை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில், அச்சுவேலி பொலீசார் இன்றைய தினம் அச்சுவேலி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பாக டெங்கு நுளம்பு பரவக்கூடிய ஏதுவான சூழல் இனங்காணப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டு இருந்தனர். அச்சுவேலிப் வல்லை வீதி, இராச வீதி, அச்சுவேலிட நகரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் அச்சுவேலிப் வல்லைப் பகுதிகளில் குப்பைகளை கொட்டும் நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.


எஸ் தில்லைநாதன்