
posted 28th October 2021
செவ்வாய் கிழமை (26.10.2021) மன்னார் மாவட்டத்தில் 12 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம் (ஒக்டோபர்) கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 26.10.2021 அன்று 12 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் அடம்பன் மாவட்ட வைத்தியசாலையில் தலா 03 நபர்களும். வங்காலை மற்றும் நானாட்டான் மாவட்ட வைத்தியசாலைகளில் தலா 02 பேரும், முருங்கன் ஆதாரா வைத்தியசாலை மற்றும் பெரிய பண்டிவிரிச்சான் மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றில் தலா ஒருவருமாக மொத்தம் 12 கொவிட் தொற்றாளர்களே இனம் காணப்பட்டவர்களாவர்.
மன்னார் மாவட்டத்தில் இதுவரைக்கும் மொத்தமாக 29321 பி.சீ.ஆர் பரிசோதனையில் 2317 கொவிட் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் அதாவது ஒக்டோபர் மாதம் இதுவரை 359 பி.சி.ஆர் பரிசோதனையும் 2344 அன்ரிnஐன் பரிசோதனைகளும் மேற்கொண்டதில் 197 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இது வரைக்கும் மன்னார் மாவட்டத்தில் முதலாவது கொவிட் தடுப்பூசிகள் 80732 ம், இரண்டாவது தடுப்பூசிகள் 73073 பேருக்கும், பாடசாலை மாணவர்களுக்கு 1741 மாணவர்களுக்கும் மற்றும் பாடசாலைக்கு செல்லாத குறிப்பிட்ட வயதுடையோர் 311 நபர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தனது கொவிட் சம்பந்தமான நாளாந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ