செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்று உறுதியான தகவலை இன்று அவர் தனது முகநூல் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, அவர் கடந்த வாரம் பாராளுமன்ற கூட்டத் தொடரிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று

எஸ் தில்லைநாதன்