
posted 26th October 2021
குருநகரில் இன்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் உள்ளூர் இழுவை மடி தொழிலும் நிறுத்தப்படவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளதோடு, கடற்றொழில் அமைச்சர் இழுவை மடி தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது
வல்வெட்டித்துறை மற்றும் குருநகர் பகுதி உள்ளூர் இழுவைமடி தொழில் செய்யும் மீனவர்கள் சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்க முன்றிலில் இந்தப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது..
சுமந்திரனுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டு மீனவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, போராட்டத்தின் முடிவில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டதோடு உருவப் பொம்மைக்கு தடிகளால் மீனவர்கள் தாக்குதலையும் மேற்கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்