சுத‌ந்திர‌த்துக்கு பின் வ‌ந்த‌ எந்த‌ அர‌சாங்க‌மாவ‌து த‌வ‌று செய்யாம‌ல் இருந்த‌துண்டா?

முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

முத‌லாவ‌தாக‌ ஆட்சிக்கு வ‌ந்த‌ unp அர‌சாங்க‌ம் க‌ல்லோயா திட்ட‌த்தை கொண்டு வ‌ந்து அம்பாரை முஸ்லிம்க‌ளை விர‌ட்டிய‌து.

அத‌ன் பின் வ‌ந்த‌ ப‌ண்டார‌நாய‌க்கா த‌னிச்சிங்க‌ள‌ம் ச‌ட்ட‌த்தை கொண்டு வ‌ந்து நாட்டை சீர‌ழித்தார்.

அத‌ன்பின் வ‌ந்த‌ ஸ்ரீமா அர‌சாங்க‌ம் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்திலிருந்து க‌ல்முனை மாவ‌ட்ட‌த்தை பிரித்து அம்பாரை பெரும்பான்மை சிங்க‌ள ஊர்க‌ளை இணைத்து அம்பாரை மாவ‌ட்ட‌ம் ஆக்கினார். புத்த‌ள‌த்தில் ப‌ள்ளியில் துப்பாக்கிச்சூடு.

பின்ன‌ர் வ‌ந்த‌ ஜே ஆரின் ஆட்சியில் வ‌ர‌லாறு காணாத‌ துன்ப‌ம்.
முஸ்லிம்க‌ளை ஒதுக்கிவிட்டு இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌ம்.
வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைத்து கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் அடிமையாக்க‌ப்ப‌ட்ட‌மை என‌ ப‌ல‌.

பிரேம‌தாச‌ ஆட்சியில் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை புலிக‌ளிட‌ம் கொடுத்து வேண்டிய‌தை செய்யுங்க‌ள் என்றார். வ‌ட‌க்கு முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ போது அவ‌ர்க‌ளை மீள் குடியேற்ற‌ எந்த‌ முய‌ற்சியும் செய்யாம‌ல் விட்டார்.

கொழும்பில் முஸ்லிம்க‌ள் பெரும்பான்மையாக‌ வாழ்ந்த‌ ப‌குதிக‌ளில் வீட‌மைப்பை உருவாக்கி முஸ்லிம்க‌ளை சிறுமைப்ப‌டுத்தினார்.

அத‌ன்பின் வ‌ந்த‌ ச‌ந்திரிக்கா ஆட்சியில் திக‌வாப்பியில் இருந்த‌ முஸ்லிம்க‌ளின் காணிக‌ள் அப‌க‌ரிப்பு, த‌ன்னை ஆட்சிக்கு கொண்டு வ‌ந்த‌ அஷ்ர‌புக்கே ஆப்பு என‌ ப‌ல‌.

பின்ன‌ர் வ‌ந்த‌ ர‌ணில் ஆட்சியில் மூதூர் எரிப்பு, வாழைச்சேனையில் ஜ‌னாஸா எரிப்பு, பேச்சுவார்த்தையில் முஸ்லிம்க‌ள் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌மை என‌.

அத‌ன் பின் வ‌ந்த‌ ம‌ஹிந்த‌ ஆட்சியில்தான் முஸ்லிம்க‌ளுக்கு அநியாய‌ம் குறைவாக‌ இருந்த‌து. அதிலும் சில‌ த‌வ‌றுக‌ள் இருந்த‌ன‌. ஆனாலும் அந்த‌ ஆட்சியின் இறுதி வ‌ரை ஹ‌க்கீம், ரிசாத், அதாவுள்ளா, க‌பீர் அமைச்ச‌ர்க‌ளாக‌ ஒட்டியிருந்த‌ன‌ர்.

பின்ன‌ர் முஸ்லிம்க‌ள் 98 வீத‌ம் ஓட்டு போட்டு வ‌ந்த‌ ந‌ல்லாட்சி அர‌சில் வ‌ர‌லாறு காணாத‌ த‌வ‌றுக‌ள் இருந்த‌து.

இப்போது கோட்டாப‌ய‌ அர‌சில் சில‌ கொரோனா ஜ‌னாஸாக்க‌ளை எரித்த‌து த‌விர‌ வேறு த‌வ‌றுக‌ளை இன்ன‌மும் காண‌வில்லை.

க‌டந்த‌ அனைத்து அர‌சாங்க‌ங்க‌ளும் த‌வ‌று செய்த‌ போது அந்த‌ந்த‌ ஆட்சிக‌ளில் முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் ஒட்டித்தான் இருந்த‌ன‌ர்.

இந்த‌ ஆட்சியில் ஒரேயொரு முஸ்லிம் அமைச்ச‌ர். அவ‌ரும் நிய‌ம‌ன‌ எம்பி.

அவ‌ரும் ராஜினாமா செய்தால் முஸ்லிம் எவ‌ரும் இல்லாத‌ அர‌சாக‌ இந்த‌ அர‌சு ம‌ட்டுமே இருக்கும்.

இந்த‌ ஒப்பீட்ட‌ள‌வில் இந்த‌ அர‌சு இதுவ‌ரை ந‌ல்ல‌ அர‌சாக‌வே முஸ்லிம்க‌ளுக்கு உள்ள‌து.

முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி.

சுத‌ந்திர‌த்துக்கு பின் வ‌ந்த‌ எந்த‌ அர‌சாங்க‌மாவ‌து த‌வ‌று செய்யாம‌ல் இருந்த‌துண்டா?

ஏ.எல்.எம்.சலீம்