
posted 30th October 2022
சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் 'பெக்கோ' இயந்திரத்தை பயன்படுத்தி சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இதற்கு பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம், மூன்று டிப்பர் வாகனங்கள் என்பனவும் கைப்பற்றப்படுள்ளன.
புத்தூர் - சிறுப்பிட்டியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன், மூவர் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)