
posted 8th October 2021

நாடளாவிய ரீதியில் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்பு போராட்டம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை(08) காலை 7 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை இப் போராட்டம் இடம்பெற்றது.
கொரோனா தொற்று காலத்தில் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டம் இடம்பெற்ற போதும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் நடைபெற்றது.

எஸ் தில்லைநாதன்