
posted 31st October 2021
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று சனிக்கிமை நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ‘எமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும்’ ,‘இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்’ , ‘இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை’ , ‘சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு’ போன்ற கோஷங்களை எழுப்பியவாறு கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது புலனாய்வாளர்கள் அவ்விடத்தில் குவிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது

எஸ் தில்லைநாதன்