
posted 1st October 2021

வைத்திய சாலை பதில் அத்தியட்சகர் வே .கமலநாதன் தலமையில் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை 10 மணியளவில் மங்கள விளக்கு ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
மங்கல விளக்குகளை சிறுவர் வைத்திய நிபுணர் திருமதி சண்முகப்பிரியா, பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன்,சத்திர சிகிச்சை நிபுணர் பிரகதீஸ்வரன், பொது வைத்திய நிபுணர் பி.நிறஞ்சினி, மகப்பேற்று வைத்திய நிபுணர் எஸ்.சுயேத்திரா, தோல் வைத்திய நிபுணர் கே. அனுசன் உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன்