posted 6th October 2021
சர்வதேச ஆசிரியர் தினமான இன்று புதன்கிழமை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களம் முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தின்போது உலக ஆசிரியர் தினத்தில்;
அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னையை நீக்கு
பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்
இலவசக் கல்வியை வியாபாரம் செய்யாதே
கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய்
போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
இதில் கிளிநொச்சி வலய அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
எஸ் தில்லைநாதன்