
posted 19th October 2021
கிளிநொச்சி மாவட்டத்தை சார்ந்த கரியாலை நாகபடுவான் இல02 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் முதல் முறையில் கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 14 மாணவர்களில் 12 மாணவர்கள் சிறப்பு பெறுபேறுகளைப் பெற்றதற்கு அமைவாக தலா ஒவ்வொரு மாணவர்களுக்கும் 10000 ரூபா நிதி, 3000 ரூபா பெருமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்களாக (அரிசி,சீனி.மா,பருப்பு), மற்றும் கல்வி உபகரணங்கள் (கொப்பிகள்), ஆடைவகைகள் (சேட்,வெட்சீற்,வேட்டீ ) என்பன வழங்கப்பட்டன.
ஏனைய 2 மாணவர்களுக்கும் தலா 5000 ரூபா நிதியும் மேற்கூறப்பட்ட பொருட்களும் வழங்கப்பட்டது.
குறித்த பாடசாலை வளாகத்தில் இடம் பெற்ற இவ் உதவித்திட்டத்தில் மோகனதாஸ் சுவாமிகள் அவர்களும், அதிபர் து. அருந்தவசீலன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், முன்னாள் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா. கிசோர் , சமூக செயற்பாட்டாளர் இ. தயாபரன் மற்றும் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பங்கு பற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்