
posted 15th October 2021
கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே உயிரிழந்த இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
நாகேந்திரம் - தர்மலக்சுமி (வயது 84) மற்றும் சிவநேசன் - கண்மணி (வயது-75) என்போரே இவ்வாறு உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் மாதிரிகளும் கிளிநொச்சி பொது மருத்துவமனையால் வழங்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்