
posted 19th October 2021
வடக்கு மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் திங்கட்கிழமை 159 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி,
சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர்
கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் 2 பேர்
யாழ். போதனா மருத்துவமனையில் ஒருவர்
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவர்
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் ஒருவர்
ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் ஒருவர்
நொதேர்ன் தனியார் மருத்துவமனையில் ஒருவர்
என யாழ். மாவட்டத்தில் 10 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் இருவர்
மன்னார் பொது மருத்துவமனையில் ஒருவர்
மன்னார் கடற்படை முகாமில் ஒருவர்
கிளிநொச்சி பொது மருத்துவமனையில் ஒருவர்
என வடக்கு மாகாணத்தில் 20 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான மேலும் 18 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று இவ்வாறு மரணமடைந்தவர்களில் 9 ஆண்களும், 9 பெண்களும் அடங்குகின்றனர்.
இதில் 11 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 525 ஆக உயர்வடைந்துள்ளது.


எஸ் தில்லைநாதன்