கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (15.10.2021) - மன்னார்

15.10.2021 வெள்ளிக்கிழமை அன்று மன்னாரில் கொவிட் தொற்றாளர்கள் 11 பேர் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மன்னாரில் கொவிட் தொற்றாளர்கள் 2239 ஆக உயர்ந்துள்ளது என மன்னார் பிராந்திய பணிப்பாளரின் நாளாந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

பணிப்பாளர் த.வினோதன் வெளியிட்டிருக்கும் கொவிட் தொடர்பான தனது நாளாந்த அறிக்கையில்;

மன்னாரில் 15.10.2021 அன்று உறுதி கொவிட் தொற்றாளர்களில்

மன்னார் பொது வைத்தியசாலையில் 04 நபர்களும்

வங்காலை மாவட்ட வைத்தியசாலையில் 02 பேரும்

முருங்கன் ஆதார வைத்தியசாலை ஒருவரும்

பேசாலை மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும்

தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும்

நானாட்டான் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும்

மாந்தை மேற்கு சுகாதார அதிகாரி பிரிவில் ஒருவரும்

மொத்தமாக 11 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளார்கள்

இதுவரைக்கும் மன்னாரில் 29,204 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளில் 2,239 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,

இவற்றில் இதுவரைக்கும் 23 நபர்கள் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15.10.2021 இரவு 04 நபர்கள் தாராபுரம் கொவிட் தொற்றாளர்களின் இடைத்தங்கல் முகாமிலும், 06 நபர்கள் நறுவலிக்குளம் இடைத்தங்கல் முகாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் இப்பகுதியில் கொவிட் முதலாவது தடுப்பூசி 80,391 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 68,553 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (15.10.2021) - மன்னார்

வாஸ் கூஞ்ஞ