கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (12.10.2021) - வட மாகாணம்

வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 783 ஆக அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலவரம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களுடன் ஒப்புடும்போது வடக்கு மாகாணத்தில் ஒக்ரோபர் மாதத்தில் கொரோனாப் பரவலின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வடக்கில் இதுவரையில் 37 ஆயிரத்து 525 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆவணி மாதத்தில் 14 ஆயிரத்து 633 (14,633)ஆகவும், புரட்டாதி மாதத்தில் 9 ஆயிரத்து 414 (9,414) ஆகவும், ஐப்பசி மாதத்தில் 942 ஆகவும் தொற்றுப் பரவல் எண்ணிக்கை காணப்படுகின்றது.

வடக்கில் இதுவரையில் கொரோனாப் பாதிப்பினால் 783 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆவணி மாதத்தில் 228 பேரும், புரட்டாதி மாதத்தில் 348 பேரும், ஐப்பசி மாதத்தில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர்.

எனவே தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலமும், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவதன் மூலமும் கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (12.10.2021) - வட மாகாணம்

எஸ் தில்லைநாதன்