
posted 1st October 2021
24 நாட்களேயான பச்சிளம் சிசு உட்பட யாழ்ப்பாணத்தில் மூவருடன் வடக்கு மாகாணத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூட அறிக்கையின் பிரகாரம்,
24 நாட்களேயான சாவகச்சேரி சரசாலையை சிசு தொற்றால் உயிரிழந்தது. அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரை சேர்ந்த 42 வயது ஆணும், 63 வயது பெண்ணும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.
இதேபோன்று கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயது பெண் ஒருவரும் நேற்று மரணமானார்.
வவுனியாவில் உயிரிழந்த 62 வயது ஆணுக்கும் பி. சி. ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எஸ் தில்லைநாதன்