கோவிட் தொற்றும்  அப்டேற் - மன்னார் (06.10.2021)

மன்னார் மாவட்டத்தில் புதன் கிழமை (06.10.2021) ஏழு நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் கொரோனா தொடர்பான நாளாந்த தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் 06.10.2021 அன்றைய தினம் மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொடர்பான தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

இன்றைய தினத்தில் (06.10.2021) மன்னார் மாவட்டத்தில் ஏழு நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் மன்னார் பொது வைத்தியசாலையில் 02 நபர்களும், சிலாபத்துறை, தலைமன்னார், விடத்தல்தீவு ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளில் தலா ஒருவரும் மற்றும் முசலி சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவில் 02 நபர்களுமே இனம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் ஆவர்.

இந்நாளில் (06) 104 பேருக்கு எடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் 06 நபர்களுக்கும் ஒருவர் பி.சீ.ஆர். பரிசோதனையிலேயே இவ் ஏழு பேரும் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஒக்டோபர் மாதம் இந்நாள் வரை 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகளில் 42 நபர்கள் கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 29022 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் 2162 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் முதலாவது தடுப்பூசி 79494 நபர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசி 59863 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றும்  அப்டேற் - மன்னார் (06.10.2021)

வாஸ் கூஞ்ஞ