
posted 30th October 2021
மன்னாரில் மேலும் 20 நபர்களுக்கு கொரோனா 28 ந் திகதி வியாழக் கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது
28.10.2021 அன்று மன்னாரில் கொரோனா தொடர்பான நாளாந்த அறிக்கையில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் வெளியிட்டிருக்கும் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
வியாழக் கிழமை (28.10.2021) மன்னாரில் 20 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் மன்னார் பொது வைத்தியசாலையில் 04 பேரும். நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 நபர்களும், முருங்கன் ஆதார வைத்தியசாலை, அடம்பன் மாவட்ட வைத்தியசாலை, பேசாலை மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றில் தலா 02 நபர்களும், நானாட்டான், பெரியபண்டிவிரிச்சான். வங்காலை மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா ஒருவருமாக மொத்தம் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
ஆகவே மன்னார் மாவட்டத்தில் இதுவரை 2346 கொரோனா தொற்றாளர்கள் பதிவுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த மாதம் அதாவது ஒக்டோபர் மாதம் இதுவரையும் 226 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களில் 2623 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அத்துடன் குறிப்பிட்ட வயதுடைய பாடசாலையை விட்டு விலகியுள்ளவர்கள் 317 பேருக்கு இவ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ