
posted 21st October 2021
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 2275 ஆக உயர்ந்துள்ளது. இவ்வருட புரட்டாதி மாதம் இதுவரை 155 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தனது நாளாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பணிப்பாளர் மேலும் கூறுகையில்;
20.10.2021 புதன்கிழமை அன்று மன்னார் மாவட்டத்தில் 05 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்ரிஐன் பரிசோதனைகளில்;
மன்னார் பொது வைத்தியசாலை யில் ஒருவரும்
கடற்படையினர் ஒருவரும்
முருங்கன் ஆதார வைத்தியசாலையில் ஒருவரும்
அடம்பன் மாவட்ட வைத்தியசாலை யில் ஒருவரும்
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும்
மொத்தம் 05 பேர் இவ் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருட புரட்டாதி மாதம் இருபதாம் திகதி வரை 301 பி.சி.ஆர் 2075 அன்ரிஐன் பரிசோதனையில் 155 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 2275 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். அதாவது இங்கு மேற்கொள்ளப்பட்ட 29263 பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை மன்னாரில் 80417 கொரோனா முதலாவது தடுப்பூசிகளும் 68,788 இரண்டாவது தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20.10.2021 இரவு தாராபுரம் கொரோனா இடைத்தங்கல் முகாமில் 05 பேர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இங்கு மொத்தமாக 848 பேர் சேர்க்கப்பட்டதாகவும் இவர்களில் 841 நபர்கள் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாகவும், மன்னாரில் 463 பேர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 458 நபர்கள் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும்,
நறுவலிக்குளம் கொரோனா இடைத் தங்கல் முகாமில் 11 பேர் சேர்க்கப்பட்டதில் 06 பேர் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது 20 ந் திகதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ