
posted 10th October 2021
வடக்கு மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை (09.10.2021) 10 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக தயாராகியிருந்தவர்கள் என்றும் ஒருவர் 12 வயதுடைய சிறுமி என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், மன்னார் கடற்படை முகாமில் ஒருவர் என தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்