கொரோனாத் தொற்றுனால் மூதாட்டி மரணம்

வவுனியாவில் உயிரிழந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு ஊடாக பெறப்பட்டிருந்த குறித்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர் கோபால் - செல்லம்மா (வயது-78) என மருத்துவ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுனால் மூதாட்டி மரணம்

எஸ் தில்லைநாதன்