
posted 18th October 2021
தன்னை தீண்டிய நாகபாம்பை உயிருடன் பிடித்துக் கொண்டு 15 வயது சிறுவன் ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்மராட்சி - சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
பாம்புக் கடிக்கு இலக்கான சிறுவன் நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்தார். அச்சமயம் பாம்புக் கடிக்கு இலக்கானார்.
அந்த சிறுவனும் அவரின் நண்பர்களும் கடித்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்தவாறு சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர்.
இதன்போதே சிறுவனைக் கடித்தது நாகபாம்பு என்று தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

எஸ் தில்லைநாதன்