கொக்குவில் பிரம்படி வீதியில் 55 பேரின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல்
கொக்குவில் பிரம்படி வீதியில் 55 பேரின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல்

கொக்குவில் பிரம்படி வீதியில் இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் 55 பேரின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (12.10.2021) நடைபெற்றது.

பிரம்படி வீதி ஆரம்பிக்கும் இடத்தில், ஆடியபாதம் வீதியில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை நினைவேந்தினர்.

அமைதிப் படையாக இந்திய இராணுவம் 1987 ஆம் ஆண்டு இலங்கை வந்தது. பின்னாளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாபகரனை கைது செய்யும் நோக்கத்துடன் ஒக்ரோபர் 10ஆம் திகதி ஒப்ரேஷன் பவான் நடவடிக்கையை ஆரம்பித்தது. புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தங்கியிருந்தார் என்று சந்தேகிக்கப்பட்ட கொக்குவில் - பிரம்படி வீதிப் பகுதிக்குள் இந்திய இராணுவம் நுழைந்தது.

இந்த முயற்சியில் தோல்வியடைந்த இந்திய இராணுவம் அந்தப் பகுதியின் வீடுகளில் தங்கியிருந்த அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றது. அத்துடன், வீதியில் இளைஞர்களை படுக்க வைத்து அவர்களின் மேல் யுத்த டாங்கிகளை ஏற்றியும் கொன்றது. 1987 ஒக். 11, 12ஆம் நாள்களில் இடம்பெற்ற இந்தப் படுகொலையே இந்திய இராணுவம் இலங்கையில் முதல் நிகழ்த்திய படுகொலை என்று கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கொக்குவில் பிரம்படி வீதியில் 55 பேரின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல்

எஸ் தில்லைநாதன்