
posted 28th October 2021
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைதான இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் குடாநாட்டுக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தில் கடலில் வீழ்ந்த மீனவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டபோதிலும் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தார்.
மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றிருந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு ஊர்காவற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சில நாள்களில் குறித்த மீனவர்கள் இருவரும் தாயகம் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ் தில்லைநாதன்