
posted 14th October 2021
2019 ஆம் ஆண்டு வீட்டுத்திட்டத்திற்கு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் தகுதியானவர்களுக்கு இதுவரை காலமும் முழுமையாக்கப்படாமல் இழுபடுவதையிட்டு விசனம் தெரிவிப்பதுமல்லாமல் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது முல்லைத்தீவு மாவட்டமல்லால், மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் இதே நிலைமையே என்பதும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
எனவே, இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பயனாளிகள் பயன் பெறுவதற்காக அனைவரின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களையும் இணைத்து பிரதமருக்கு அடைக்கலநாதன் அனுப்பி வைத்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ