
posted 29th October 2021
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ். மின்சார சபை தலைமையகத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு கையெழுத்து போராட்டமும் இடம்பெற்றது.
கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஏற்பாட்டில் இலங்கையின் அனைத்து இடங்களிலும் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகங்களுக்கு முன்னால் இன்று (29.10.2021) மதியம் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணம், பழைய பூங்காவி வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலக முன்றலில் இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றதோடு கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்