
posted 29th October 2021
கடந்த புதன்கிழமை(27) இரவு செம்பியன்பற்று தெற்கு பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் யேசுநேசன் கமலாம்பிகை (வயது- 73) என்பவரே உயிரிழந்தவராவார்.
மேற்படி வயோதிபமாது குளியல் அறையின் விழுந்ததாக தெரிவித்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(28) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டார்.
பிரேதபரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்