
posted 15th October 2021
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட செம்மலைப் பகுதியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. செம்மலைப் பகுதியில் நீர்நிலை ஒன்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய சிறீசங்கர் என்று தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்