
posted 10th October 2021
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மாப்பாண முதலியார் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை காலை காலமானார்.
இந்த நிலையில் இறுதி கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள அவரது ஐஇல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றது.
இதில் அரசியல் பிரமுகர்கள், ஆலய தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து புகழுடல் காலை 11 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது . அதன் போது , வழிநெடுகிலும் பொதுமக்கள், வீதிகளில் நின்றவர்கள் அஞ்சலி செலுத்தியதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினர்
சுகாதார நடைமுறைப்படி , ஆரவாரங்கள் எதுவுமின்றி மிகவும் அமைதியான முறையிலே இறுதி ஊர்வலம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்