
posted 5th October 2021
கிளாலி பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று முன்தினம் சாவகச்சேரி மதுவரி திணைக்களத்தினரால் முழுமையாக அழிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கிளாலி பகுதியில் மிக நீண்ட காலமாக மிக நுணுக்கமாக யாருக்கும் தெரியாமல் இந்த உற்பத்தி நிலையம் இயங்கி வந்துள்ளது குறிப்பாக மிக நீண்ட காலமாக அவை இயங்கி வருவதற்கான சான்றுகள் காணப்படுவுதாக மதுவரி திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்
உற்பத்தியாளர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் 11 பெரல் கோடா மீட்கப்பட்டுள்ளது உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு இயங்கிய மிக பெரிய கசிப்பு உற்பத்தி நிலையமும் முற்றாக அழிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக மதுவரி திணைக்களத்தினரும், இராணுவத்தினரும் விசாரகைளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்