
posted 3rd October 2021

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகளுக்காக முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கான 'கிராமத்துடனான உரையாடல்' மக்கள் சந்திப்பு. - மருதங்கேணி
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கமைவாக, கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலில், நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களினால், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் 03 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 17 கிராமங்களுக்குமான களவிஜயம் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதனால் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விஜயத்தில், கிராமங்களுக்கான உட்கட்டுமானம், வாழ்வாதாரம், சூழலியல், மற்றும் கடலோர பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இவ்விஜயத்தில், பிரதேச செயலாளர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலக அதிகாரிகள், மருதங்கேணி பிரதேச இணைப்பாளர் மற்றும் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்