
posted 21st October 2021
மஞ்சள் வர்ண காஸ் சிலிண்டருக்கு நீல வர்ணம் பூசி காஸ் பெற்ற நபர் தொடர்பில் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை(19.10.2021) நெல்லியடி சந்தைப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் தனது வெற்று சிலிண்டரை வழங்கிவிட்டு காஸ் பெற்றுள்ளார்.
பின்னர் மஞ்சள் வர்ணத்தில் உள்ள சிலிண்டருக்கு நீல வர்ணம் பூசி வர்த்தகரை ஏமாற்றியமை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள சி.சி.ரீ.வி கமராவில் பரிசோதித்துப் பார்த்தபோது அங்கு சிலிண்டர் கொடுத்த நபர் கமராவில் அகப்பட்டுள்ளார். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்