காலநிலை முன்அறிவிப்பு - 29.10.2021
காலநிலை முன்அறிவிப்பு - 29.10.2021

முகம்மட் சாலிஹீன்

கிழக்கில் பெருமழை
(ஏ.எல்.எம்.சலீம்)

கிழக்கிலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கடந்த சில தினங்களாக அடிக்கடி பெருமழை பெய்து வருகின்றது.

குறிப்பாக மாலை வேளைகளிலும் இரவு வேளைகளிலும் மின்னல் முழக்கத்துடன் கூடியதாக பெருமழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கரைக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தித்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கப் பிரதேசத்தின் தாக்கம் காரணமாகவே நாட்டில் இவ்வாறு மழை பெய்து வருவதாக கொழும்பு, வளிமண்டல வியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி முகம்மட் சாலிஹீன் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல பிரதேசங்களிலுமுள்ள நெல் வயற்பிரதேசங்களில் மழை நீர் தேங்கத் தொடங்கியிருப்பதுடன், உள்ளுர் வீதிகள், தாழ்நிலப்பிரதேசங்களிலும் மழை நீர் தேங்கி பொது மக்கள் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

மழைக்காலமாதலால் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளதுடன்.
கடல் கொந்தளிப்பும், பெருக்கமும் ஏற்பட்டு கடல் மீன் பிடியும் தற்சமயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

காலநிலை முன்அறிவிப்பு - 29.10.2021

ஏ.எல்.எம்.சலீம்