காரைநகர் தவிசாளர் மரணமானார்
காரைநகர் தவிசாளர் மரணமானார்

தவிசாளர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ்

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் (வயது 79) கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று அவர் மரணமானார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவரான இவர், 2018 ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சிரேஷ்ட தபாலக அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் தவிசாளர் மரணமானார்

எஸ் தில்லைநாதன்