
posted 20th October 2021
காரைநகர் கடற்பரப்பில் காணாமல்போன இந்திய மீனவரின் உயிரற்ற உடல் இன்று புதன்கிழமை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
காரைநகர் கடற்பரப்புக்குள் நேற்று ஊடுருவிய இந்திய மீன்பிடிப் படகை கடற்படையினர் கைது செய்ய முயன்றவேளை, கடற்படையினரினதும் மீனவர்களதும் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு நொருங்கிக் கடலில் மூழ்கியது. இதன்போது படகில் இருந்த மூவரில் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். இருந்தபோதும் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு காணாமல்போன இந்திய மீனவரின் உடல் நேற்று கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு கொண்டு வரப்பட்டது.
காங்கேசன்துறை கொண்டுவரப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்