கல்முனை பிராந்தியத்திலும் பைசர்

நாடளாவிய ரீதியில் இடம்பெற ஆரம்பிக்கப்பட்டுள்ள கொவிட் - 19 இற்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் கல்முனைப் பிராந்தியத்திலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறிப்பாக 12 வயது தொடக்கம் 19 வயதுக்க உட்பட்ட விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோயுடையவர்களுக்கே இந்த பைசர் தடுப்பூசி ஏற்றப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கென கல்முனைப்பிராந்தியத்திற்கு ஒரு தொகுதி பைசர் ரக தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்தியத்தில் ஐந்து வைத்தியசாலைகளில் இத்தடுப்பூசி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதுடன், பெரும்பாலும் நாளை திங்கட் கிழமை முதல் இத்தடுப்பூசி ஏற்றல் ஆரம்பமாகுமெனவும் அறிய வருகின்றது.

இதன்படி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, கல்முனை அஷ்ரப் ஞாபகாரத்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை என்பவற்றில் மேற்படி பைவர் தடுப்பூசி ஏற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுமுள்ளது.

விசேடதேவையுடைய சிறுவர்களும், நாட்பட்ட நோயுடைய சிறுவர்களையும் உடனபடியாக அவர்களது கிளினிக் நடைபெறும் வைத்தியசாலைகளில் பதிவு செய்து கொள்ளுமாறும்,
கல்முனைப் பிராந்தியத்திலிருந்து கொழும்பு மற்றும் ஏனைய வைத்தியசாலைகளுக்கோ கிளினிக் சென்றாலும் குறித்த கிளினிக் பதிவேட்டுடன் அருகிலுள்ள ஆதார வைத்தியசாலைகளுக்கு வருகை தருமாறும் இத்தடுப்பூசி ஏற்றலுக்கான அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்தியத்திலும் பைசர்

ஏ.எல்.எம்.சலீம்