
posted 19th October 2021
கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கலைஞர்களுக்கு நீலண் திருச்செல்வம் நம்பிக்கை நிதியத்திலிருந்து ஸ்வஸ்திக் நுண்கலைக் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உதவி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஐம்பது கலைஞர்களுக்கு இவ் உதவி வழங்கப்பட்டது.
இவ் உதவித் திட்டத்தில் ஐயாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
திங்கள் கிழமை (18.10.2021) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் ஸ்வஸ்திக் நுண்கலைக் கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில்; மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் கலந்துகொண்டு இவ் உதவிப் பொருட்களை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
மன்னார் மாவட்ட செயலக பிரதம கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எம்.குணபாலன், திட்டப்பணிப்பாளர் க.மகேந்திரன், இந் நம்பிக்கை நிதியத்ததைச் சார்ந்தவர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ