
posted 6th October 2021
ஆசிரியர் தினமான இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செம்மணி வீதியில் உள்ள வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு அலுவலத்துக்கு முன்னாள் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர், மாணவர், பெற்றோர்களை துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வை வழங்கு
24 வருட ஆசிரியர்களின் சம்பளம் முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வை வழங்கு
இலவசக் கல்வியை ராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய்
ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் அதிபர், ஆசிரியர்களால் இந்த கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதிபர்கள், ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


எஸ் தில்லைநாதன்